Wednesday, 9 April 2014

கனியும் ஒரு காதல்.. 2

அகிலா சாப்பிட்டுவிட்டு... சூப்பர்வைசரை அழைத்தாள்.....வந்தவன்..." மேடம் நீங்க தப்பா நினக்கலைன்னா ஒன்னு சொல்லட்டுமா....""என்ன பரவாயில்ல சொல்லுங்க.....""எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... நீங்கள் வாழ்கையில் நினத்தது நடக்க.... "சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்...."நீங்க இரண்டு பேரும் made for each other mam..... என்ன அப்படி பாக்குறீங்க .. நான் இந்த வேலைல இருக்கும் போது எத்தனையோ ஜோடிகளை பார்த்திருக்கேன்.. பல விதமா... ஆனா உங்க இருவரையும் மாதிரி நான் பாக்கலை... நல்ல ஜோடி நீங்க இருவரும்....""ம்ம்ம் இல்லை நான்.... ""ம்ம் நீங்க இன்னும் அவர் கிட்ட ப்ரபோஸ் பன்னலன்னா.. உடன சொல்லிடுங்க.. வேற யாராவது கொத்திக்கிட்டு போயிட போறாங்க..""எப்படி .. நீங்க....""மேடம் உங்க ரெண்டு பேர் கண்ணிலும் காதல் நல்லாவே தெரியுது... நீங்க என் தங்கை மாதிரி இருக்கீங்க அதனால சொல்லுறென்...இங்க சாப்பிட வந்ததும் அவர் என்ன சொன்னார் தெரியுமா...""என்ன சொன்னார்....."நீங்களும் தான் சரியா சாப்பிடல்ன்னு வருத்தப்பட்டார்....அதனால தான் பொங்கலை மட்டும் தனியா எடுத்து வச்சார்..நீங்க அவர் சாப்பிடலைன்னு என்னிடம் சொல்லி டிபன் அரேஞ் பண்ணீங்க... ஒரு கெஸ்டா நான் உங்களை பார்கலை...என் தங்கையா பாக்குறென்.... சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்... தப்பா இருந்தா.. மன்னிச்சுக்கங்க... பிளீஸ்.....அப்புரம் தோசை நல்லா இருந்துதா... " அவன் கேட்க....அகிலாவுக்கு வெட்கம் புடுங்கியது... எப்படி என்பது போல் அவனை பார்க்க.... "மேடம் நாங்க டி வி பார்த்தாலும் பார்ல நின்னாலும் எங்கள் கண் எப்பவும் எங்க கெஸ்ட் மேல தான் இருக்கும் அவங்க சைகக்கு தான் காத்து இருப்போம்.... நீங்க ரசிச்சு சாப்பிட்டதை நானும் பார்த்தேன்... my adavance congratulations....." சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்....அகிலா...சொல்ல முடியாத ஒரு உணர்வு அவள் உடல் முழுவதும் பரவு வதை உணர்ந்தாள்....மொபைல் அடிக்க.. எம் டி தான்"அகிலா WHAT IS THIS THE PROJECTOR IS NOT WORKING PROPERLY WHERE ARE U NOW.... COME FAST......" கரிஜித்தார்அதிர்ந்தாள்...அடப்பாவிகளா என்ன ப்ண்ணித் தொலைச்சாங்க. இவனுக.. பர பரப்பாய் ஓடினாள்.....அங்கே...போடியம் ல் நின்று G. M Sales...பேசிக் கொண்டிருந்தார்.. முன்னால் இருந்த டேபிளில் புரஜக்டர்.. வேலை செய்யாமல்.. ஸ்கிரீன்ஒயிட் ஆக ... மோகன் அங்க வயர செக் பண்ணிக் கொண்டுருந்தான்... ஒரு நிமிடம் இரண்டு நிமிடம்.. இரண்டு வயர்களை புடுங்கினான்.. தன் கையில் கொண்டு வந்திருந்த தோள் பைய எடுத்தான்.. அதிலிருந்து புதுசா ஒரு கேபிள் எடுத்தான்.... பவர் கேபிளை மாத்தினான்.. மறு நிமிடம் சர்ர்ர்ர்ர் என்ற சத்ததுடன் இயங்க தொடங்கியது....."ம்ம்ம் லூஸ்ஸ் காண்டாக்ட்... சாரி சார் இப்ப சரியாயிடுச்சு..." அவள் உள்ளே நுழையவும்.. ப்ரொஜக்டர் ப்ளீரென ஸ்க்ரீனில் படம் விழவும் சரியாக இருந்தது.. எம்..டி... அவளைப் பார்த்தார்...."தாங்க்ஸ் அகிலா... நான் என்னமோன்னு நினச்சேன்.. நீ மோகனும் வரனும் சொன்னப்ப... கரெட் சாய்ஸ்... உஷார் பேர் வழி போல...அவனுக்கு தேவை இல்லாதது இது ஆனாலும் முன் ஜாக்கிறத்தையா.. ஆர்டினரி பவர் கேபிள் இதுக்கு செட் ஆகாது.. இது வேற மாதிரி இருக்கும்.. 1% இந்த மாதிரி ஆகலாம்... அத கூட எடுத்திட்டு வந்திருக்கான்... நைஸ் கைய்.. " சொல்லி விட்டு நகர்ந்தார் எம் டிஅங்கிருந்த வாரு மோகன் அவளைப்பார்க்க.. அவள் கண்களால் நன்றி சொன்னாள்...அவன் அங்கிருந்து ஹேய் சும்மா இருடின்னு இதுக்குப் போய் ஏன் பதட்டப்படுற..... சொல்லுரமாதிரி மெல்ல கையசைத்தான்.....அப்படித்தான் சொல்லி இருப்பானோ...மனசு தவித்தது....அதன் பிறகு ஏதும் நடக்காமல்.. லஞ்ச்பிரேக்...எல்லோரும் ஒரே கூட்டமாக... மொய்க்க... மோகன் தனியாக ஒரு தட்டில் எடுத்து கொண்டிருந்தான்... அகிலா பதறி விட்டாள்.. பாவி கெடுத்தானே... அவனுக்காக எடுத்தாலும் சரி.. இல்லை தனக்காக எடுத்தாலும் சரி யாராவது பார்த்தால் என்ன நினைபார்கள்... எப்பவும் அவர்கள் கடைசியாகத்தான் சாப்பிடுவார்கள் ஆர்கனைசர்கள்... அவர்கள் வேலை மற்றவர்களுக்கு எல்லாம் ஒழுங்காக கிடைக்கிறதா.... அதாவது கொடுக்குற காசுக்கு ஹோட்டல் காரன் ஒழுங்கா சப்ளை பண்ணுரானா...எல்லோரும் சாப்பிடுராங்களா... இதையும் கவனிக்கனும்.. இப்ப இவன் சாப்பிட்டான்.. நான் செத்தேன்... பாவி.. சத்தம் போட்டு சொல்ல கூட முடியாது இவ்வள்வு சத்ததில கேக்கவும் செய்யாது... என்ன பண்ண.... மொபைல எடுத்தாள் அவன் நம்பர் டயல் செய்தாள்....பெல் அடித்தது அவன் எடுக்கவில்லை.. கூட்டத்தில் அவனை தேடினாள் அகிலா...அதோ பார்த்து விட்டாள் அவனை.. இரண்டு கைகளில் இரண்டு தட்டை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.. முகத்தில் ஒரு புன்னகையுடன்....அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்... அவள் அருகில் வந்தவன்... "ம்ம்ம்ம் கூப்பிட்டாயா அகி... இரு இதை எம் டி கிட்ட கொடுத்திட்டு வந்திடுறேன்..." சொன்னவன் மெல்ல அவளைக்கடந்து சென்றவன்...அவள் பின்னால் கொஞ்சம் தள்ளி ஓரமாய் ஒரு டேபிளில் எம் டி மற்றும் ஜி எம் இருவரும் அமர்திருந்த டேபிளில் போய் வைத்தான் மோகன்... எம். டி அவனைப் பார்த்தார்.. தட்டை பார்த்தார்..."ம்ம்ம்ம்ம் குட்....எனக்குப் பிடித்த அயிட்டங்கள் எடுத்து வந்திருக்க... ஆமா மோகன் நீ எப்பப்பா இந்த் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்த.... "சொல்லி விட்டு சிரித்தார்...."இல்லை சார் அங்க நிறைய கூட்டமா இருக்கு இப்ப... நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு அகிலா சொன்னாங்க... அது தான்.....சார்...நானே......." சொல்லிவிட்டு எம் டி கிட்ட ஒரு தட்டையும்... ஜி எம் கிட்ட ஒரு தட்டையும் நீட்டினான்... மோகன்...."ம்ம் நல்ல ஹாஸ்பிட்டாலிட்டி அப்படியே எல்லாரும் நல்லா சாப்பிடுராங்களான்னு பாருப்பா... ஆமா நீ சாப்பிடலையா...""இல்லை சார் நாங்க அப்புறம் கடைசில சாப்பிட்டுகிடுறோம்.... அகிலா சொல்லி இருக்காங்க....". சொல்லி விட்டு மற்றவர்களை கவனிக்க தொடங்கினான்....கவனித்திக் கொண்டிருந்த அகிலா அப்படியே உறைந்து நின்றாள்.. ஒரு பொம்பளை தனக்கு கூட தோனாதது... அவனுக்கு தோணியிருக்கு.. மெல்ல ஒரு புன் சிரிப்பு வெட்கம் கலந்த புன் சிரிப்பு நின்றது அவள் இதழ்களில்..எம். டி கையசைத்து அகிலாவை கூப்பிட்டார்.... அகிலா அவர் அருகில் வந்தாள்"சார்... சொல்லுங்க சார்....""அகிலா.. ம்ம்ம் பையன் நல்ல செலக்ட் பன்னியிருக்க.....""என்ன சார் சொல்லுரீங்க.....""இல்லைம்மா.. பையன் பயங்கர சுமார்ட்... ம்ம்ம் உன் செலக்சன் பிரமாதம் அகிலா.... நல்லா வருவான்...one of the assest of the company...keep him with you..... நான் பசி தாங்க மாட்டேன்னு கூட அவன் கிட்ட சொல்லி வச்சிருக்கிறா.. குட் குட்...". சொல்லி சிரித்தார்.....ஜி எம் மும் அவர் சொன்னதுக்கு தலை அசைத்தார்.....""தாங்க்ஸ் சார்.. மெல்ல நகர்ந்தாள் அவரிடமிருந்து.. நான் எப்படா உன் கிட்ட சொன்னேன்... எப்பவோ ஒரு முறை பேச்சு வாக்கில் சொன்னது... இன்னும் என்ன இருக்குடா உன்னிடம்... என்னப் படுத்திருயே படுவா....இப்பவே உன் கிட்ட சொல்லனும் போல இருக்குடா.... என்ன சொல்ல....பிடிச்சிருக்குன்னா... ச்ச்சி... நீயா செய்யிர எல்லாத்தையும் நான் தான் செய்யச் சொன்னேன்னு...சொல்ல.. மனசு வேனும்டா.. செல்லம்...அது உன் கிட்ட நிறைய இருக்குடா...இல்லை என்னை இம்பிரஸ் பண்ண இதை எல்லாம் செய்யிரியா... நான் தான் எப்பவோ உன் கிட்ட மயங்கி கிடக்கிறேனே... இன்னும் என்ன இருக்கு இம்பிரஸ் பண்ண்.. மனசு அலறியது.. 

1 comment:

  1. The 8 Best Casinos in Las Vegas - Mapyro
    Best Casinos 정읍 출장안마 Near The Wynn Hotel · Golden Nugget 서귀포 출장마사지 · Caesars Palace · Treasure Island Resort & 동두천 출장샵 Casino · Wynn 원주 출장샵 Las Vegas · The LINQ Promenade · Palazzo Las 의왕 출장샵 Vegas

    ReplyDelete