ராம் அதற்கு, " ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வந்தா.. அதுக்கு அப்புறமா நீ தான் எனக்கு ஆயுசு முழுவது சோறு போடணும்.. இங்க எப்ப எவன் காலை வாறுவான்னு தெரியல. ஒரு நாள் லீவ் போட்டாலே அடுத்த நாள் நம்ம மேல பத்து தப்பு கண்டுபிடிச்சு ஆப்படிக்குரானுங்க.. ஒரு வாரம்னா அவ்வளவு தான் வீட்டுக்கு அனுப்பி வைக்குற அளவுக்கு பெரிய ஆப்பு வெச்சிருவானுங்க. " என்று பெரியதாக ஒரு பிட்டை போட்டு தப்பினான் ராம். " சரி விடு.. ரெண்டு நாளாவது வந்து இருந்துட்டு போ" என்று சொல்லிவிட்டு , " ஆமா , அம்மா உனக்கு மூணு நாளா போன் பண்ணிட்டே இருக்காங்களாம். நீ போன் எடுக்கவே இல்லையாமே ஏன் ?? " என்று ஆரம்பித்தவளிடம் " நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதான் எடுக்கல. இன்னிக்கு கால் பண்ணி பேசிக்குறேன். அத்தானை கேட்டதா சொல்லு" என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக போனை கட் செய்தான். "ராம்.. ஒரு நிமிஷம் போனை கட் பண்ணாதே", என்று கீர்த்தி கடைசியாக சொன்னது ராமின் காதில் விழுந்ததை அவன் கண்டு கொள்ளவில்லை. சிறிது நாட்காளாகவே ராம் அவனது அத்தானிடம் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்திருந்தான். எல்லாம் அந்த நிகழ்ச்சி நடந்து பிறகு தான். தன் தம்பி இப்பொழுது நிறைய பொய் சொல்ல ஆரம்பித்து விட்டான் என்பதையும் அவனது அம்மாவிடம் பேசுவதையும் கடந்த இரு மாதங்களாக குறைத்திருந்தான் என்பதையும், அம்மாவிடம் மட்டுமல்ல தனது கணவனிடம் கூட பேசுவதை பெரும்பாலும் தவிர்க்க முயல்கிறான் என்பதை உணர்ந்திருந்தாள் கீர்த்தி. "எல்லாம் என்னால தான் இப்படி ஆச்சு.. இவன் வாழ்வில் இவனுக்கு நல்லது செய்வதாய் நினைத்து தான் செய்த சிறு தவறினால் இப்பொழுது அவனின் வாழ்க்கை கேள்விக்குறியாகிடுச்சே.. இதை நான் எப்படி மாற்ற போகிறேன் " என்று தன் மனதிற்குள் புளுங்கியவாறு இருந்தாள் கீர்த்தி______________________________போனை கட் செய்தவுடன் , " அம்மா கிட்ட பேசினாலே , கல்யாணத்தை பற்றியே பேச்சை எடுக்கிறான்னு பேசாம இருந்தா,எல்லாரிடமும் இப்படி புலம்ப ஆரம்பிச்சுடராங்களே.. முதல்ல அவங்க கிட்ட போன் பண்ணி பேசிட்டு தன் மிச்ச வேலைய பார்க்கணும் இன்னிக்கு.. " என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டவாறே தனது அம்மாவின் கைப்பேசி நம்பரை டயல் செய்தான். இரண்டு ரிங் போரதுக்குள்ளேயே, அவனது அம்மா முத்து பார்வதி போனை எடுத்தார்கள். " என்னடா கண்ணா , போன் பண்ணினா எடுக்கவே மாட்டிகுற??!!!! வேலை அதிகமா இருக்காடா ராஜா !! " என்று அக்கறையாக கேட்டாள். " ஆமாம்மா.. கொஞ்சம் அதிகமா தான் இருக்கு.. " என்று சொல்லி முடிப்பதற்குள்,, " வேலை அதிகமா இருக்குன்னு சொல்லிட்டு வேளா வேலைக்கு சாப்பிடாம இருக்காதப்பபா ராம். நல்லா சாப்பிட்டு உடம்பை ஜாக்கிரதையாக பார்த்துக்கோ.. பனி அதிகமா இருக்குன்னு பேப்பர்ல போட்டுருக்காங்க.. ரெண்டு மூணு கனத்த பனியான போட்டுக்கிட்டு அதுக்கு மேல ஸ்வெட்டெர் போட்டுக்கிட்டு தூங்குப்பா நைட்டுல.. " என்று அடுக்கிக்கொண்டே போனவளை.. " நான் என்னைய நல்லா பாத்துக்குறேன்மா.. நீ எப்படி இருக்க ?? அப்பா எப்படி இருக்காங்க ?? அங்க குளிர் எல்லாம் எப்படி இருக்குது ?" , என்று கேட்டுகொண்டிருந்த பொழுது , "உங்க அம்மாவை நல்லா திட்டுப்பா.. காலையில பனியில எந்திரிச்சு கோலம் போட்டுட்டு இருக்காங்க. குல்லா வச்சிகோனு சொன்னாலும் கேட்க மாட்டிக்குரா .. நீயாவது சொல்லு.. நீ சொன்னாதான் உங்க அம்மா கேட்பா.. " என்று எங்க அப்பா பின்னிலிருந்து குரல் கொடுத்தார். "என்னம்மா நீ.. என்னைய சொல்லிட்டு நீ பனியில வெளிய போய் கோலம் போடுறியா ?? குல்லாவாவது போட்டுக்கிட்டு கோலம் போடும்மா" என்று சொன்னான்.அதற்கு , "அதெல்லாம் ஒன்னும் இல்ல ராம். உங்க அப்பா சும்மா சொல்லிட்டு இருக்காரு.. அது சரி .. நான் அனுபிச்ச பொண்ணு போட்டோவ பார்த்தியா ?? பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா ?? , என்று பழைய புராணத்தை ஆரம்பிக்கவும் .. அதற்கு பதில் அளிக்காமல் மழுப்பும் விதமாக தனது பொங்கல் பிளானை பற்றி கூறி அதற்கு தகுந்தாற் போல் ரெடியாக இருக்குமாறு சொல்லிவிட்டு போனை கட் செய்தான் ராம்.ராமிற்கு போன் செய்யும் போதெல்லாம் கல்யாணத்தை பத்தி பேசாமல் போனை வைப்பதில்லை முத்து பார்வதி. அதனாலயே தனது அம்மாவிடம் முடிந்த வரை பேசுவதை தவிர்த்து வந்தான். ஆனால், கணபதியோ ராமிடம் கல்யாண விஷயத்தை பேசினால் கோவம் அடைகிறான் என்பதை உணர்ந்து , முடிந்த வரை அந்த விஷயத்தைப் பற்றி பேசுவதை தவிர்த்து வந்தார். அதனால் ராமும் தினமும் தனது அப்பாவிற்கு மட்டும் போன் செய்து அன்றைய நிகழ்வுகளை தெரிந்து கொள்வான்.
No comments:
Post a Comment