ஒவ்வொருவரும் தன் சொந்த ஊரை விட்டு பணம் சம்பதிப்பதற்காகவோ, உறவை தேடியோ மற்ற பல காரணங்களுக்காகவோ சென்று விடுகின்றனர். அவ்வாறு சென்று பின் என்றாவது ஒரு நாள் அந்த ஊருக்கு திரும்பி செல்லும் போது அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு இடமும் பல கதைகளை சொல்லும். அந்த ஊருக்கே உரித்தான வாடைக் காற்று, மண் வாசனை, பேச்சு வழக்கு என்று ஒவ்வொன்றும் நம்முள் ஒரு புத்துணர்ச்சியை கிளப்பும். அதே போல்,நந்தினியின் நினைவுகளிலேயே மூழ்கிப் போய் உறங்கிய ராமை அடுத்த நாள் காலை அவனின் ஊரை நெருங்கும் போது அவனது ஊருக்கே உரிய வாடைக் காற்றும் மண் வாசனையும் தட்டி எழுப்பின. ஜன்னல் வழியாக தெரிந்த ஒவ்வொரு இடமும், அவனுக்கு சிறுவயது நினைவுகளை அளித்தது. இதனால் ஊருக்கு வருவது அவனது மனதுக்கு பிடிக்கவில்லை என்றாலும் , பேருந்து அவனது ஊரின் உள்ளே நுழையும் போதே பழைய மலரும் நினைவுகளை அவனுக்கு கொடுத்து அவனக்கு தற்பொழுது புத்துணர்ச்சி வந்திருந்தது. பேருந்து திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தை காலை 5.45மணிக்கு சென்றடைந்தது. அங்கிருந்து அவனது வீட்டிற்கு டவுன் பஸ்ஸில் ஏறிச் சென்றடைந்தான். பல மாசத்திற்குப் பிறகு அவனது வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அவனது பெற்றோர் , ராமை அன்போடு வரவேற்று உச்சி மகிழ்ந்தனர். உடனேயே குளித்து விட்டு அவனது தந்தையுடன் மொட்டை மாடிக்கு சென்று சூரிய நமஸ்காரம் செய்து விட்டு கீழே வந்தான் ராம். அவனது அம்மா ராமிற்காகவே டிகிரி காபி தயார் செய்து வைத்திருந்தாள். அதைப் பருகியவாறே, காபியை பாராட்டிக்கொண்டே ரொம்ப நாள் கழித்து சந்தித்த அவனது அப்பா அம்மாவிடம் நெடுநேரமாக பல கதைகளை பேசிக்கொண்டிருந்தான். அவனது அம்மாவும் ஊரில் புதியதாக என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று விலாவரியாக சொல்லிகொண்டிருந்தாள். பிறகு காலை 9 மணி அளவில், தனக்காக ஸ்பெஷலாக செய்திருந்த சிற்றுண்டியை சாபிட்டான். சாப்பிட்டு முடித்து தனது நண்பர்களை பார்க்க புறப்பட்ட ராமிடம், மதிய உணவிற்கு மறவாமால் வீட்டிற்கு வந்து விடுமாறு சொல்லி அனுப்பி வைத்தாள் முத்து பார்வதி. ______________________________
இரண்டு தெரு தள்ளி இருந்த தனது நெருங்கிய நண்பன் குமாரின் வீட்டிற்கு சென்றான் ராம். குமாரும் அன்று தான் சென்னையில் இருந்து வந்திருந்தான். குமாருடன் கொஞ்ச நேரம் பேசிய பின்னர், நண்பர்கள் இருவரும் மற்ற நண்பர்களுடன் பொங்கல் ரிலீஸ் படத்திற்கு போக டிக்கெட் புக் செய்துள்ளதாக சொல்லி ராமை குமார் வற்புறுத்தி படத்திற்கு அழைத்து சென்றான்.தியேட்டருக்கு தனது பழைய நண்பர்கள் அனைவரையும் பார்த்துஅவர்களுடன் அளவளாவி விட்டு, உற்சாகத்துடன் (பல நாட்களுக்கு பிறகு) படம் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பினான்.படம் பார்த்து விட்டு வீட்டிற்கு சென்ற ராமை அவனது அம்மா தடபுடலான விருந்து தயாரித்து வைத்து வரவேற்றாள். "என்னம்மா இது ?!!! என் ஒருத்தனுக்காக இவ்வளவு நிறைய யேம்மா செஞ்சீங்க ?? "டேய் ராம் கண்ணா , நீயே எப்பாவது வீட்டுக்கு வர.. நீ வர்றப்பவாது நல்ல சமைச்சு போடணும்னு எனக்கு ஆசை இருக்காதா ??!! கேன்டீன் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு எப்படி துரும்பா இளைச்சுப் போயிருக்கபாரு !!!" , என்றாள் முத்து பார்வதி. "அதுக்காக இவ்வளவு நிறைய செஞ்சா யாரும்மா இவ்வளத்தையும் சாப்பிடுவாங்க ??", என்றான் ராம். "முடிஞ்ச வரைக்கும் சாப்பிடு .. மிச்சத்தை எல்லாத்தையும் அக்கா வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுவோம் ", என்றாள். மாலை மூன்று மணி அளவில் , ராம் அவனது அப்பா அம்மாவுடன் தென்காசிக்கு தனது நண்பன் குமாரின் ஸ்விப்ட் காரில் கிளம்பினான். போகும் வழியிலே பொங்கலுக்கு அக்காவுக்கு கொடுக்க வேண்டிய கரும்பு, மஞ்சள் குலை மற்றும் பூஜைக்கு தேவையானவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ராம் காரைஓட்டிக் கொண்டிருந்தான். அவனது அப்பா அம்மா பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தென்காசிக்கு போகும் வழியில் ஆலங்குளம் என்றொரு ஊர் இருந்தது. அந்த ஊரை கடந்து செல்லும் பொழுது அவனுள் சிறு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. அந்த ஊரிற்குள் செல்லும் பொழுது இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே சென்றான். தெரிந்த உருவம் எதாவது தென் படுகிறதா என்று அவனை அறியாமலேயே அவனது கண்கள் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தது. ஆனால்அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் தேடிய முகம் தட்டுப்படவில்லை. அந்த ஊரை தாண்டிய பின்னர் ஏமாற்றத்தினால் ஏற்பட்ட கோவத்தை காரின் ஆக்சிலரேட்டரின் மேல் காண்பித்தான். காரின் வேகம் அதிகமாவதை உணர்ந்த அவனது அம்மா, "ராம்.. தீடீர்னு ஏன்டா இவ்வளவு ஸ்பீடா போற ??!!! கொஞ்சம் மெதுவாவே ஓட்டுடா.. " என்று சொல்ல, வேகத்தை சிறிது குறைத்து,சீரான வேகத்தில் ஓட்ட காரும் சீராக சென்று கொண்டிருந்தது. காரின் வேகம் சீரனாலும் , அவனது எண்ணங்கள் சீராகாமல் தாறு மாறாக சென்று கொண்டிருந்தன..
கல்லூரி காலத்தில், ஒவ்வொரு முறை ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வரும் பொழுதும், நந்தினியுடன் அவளது ஊரான ஆலங்குளம் வரைக்கும் வந்து அவளை விட்டு விட்டு தான் தான் வீட்டிற்கே செல்வான். ஒவ்வொரு முறை நந்தினியுடன் வரும் பொழுதும், தன் வீட்டிற்கு வருமாறு நந்தினி அழைப்பாள். ஆனால் பின்னொரு முறை வருவதாக சொல்லி விட்டு சென்று விடுவான். ஆதலால் இப்பொழுது ஆலங்குளத்தை தாண்டும் பொழுது, அவள் முகம் தனக்கு தட்டுப்படாதா?!! என்று ஏங்கினான். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை என்று உணர்ந்ததும், அவனது மனம் அமைதியில்லாமல் போனது. "ச்சே.. அவளைப் பார்க்கவே கூடாது. அவளைப் பற்றிய நினைவே வரக் கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்த என் மனசுக்கு என்னாச்சு !!!?? இவ்வளவு நாளா இருந்த கோவம் என்னாச்சு ??!!" என்று யோசித்த ராம்.. பின்பு தான் உணர்ந்தான் " அவ மேல கோவம்லாம் ஒன்னும் இல்லையே. அவளை மறக்க வேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போகவே, அவள் மேல் இருந்த காதலை வெறுப்பாக மாற்றினால் தான் அவளை மறக்க முடியும் என்றெண்ணி, அவள் மீது கோவமாக இருப்பது போல் நடிக்க தானே செய்கிறாய்.. அது அவளது ஊரைப் பார்த்ததும், ஆவலுடன் சேர்ந்து இருந்த நிமிடங்கள் எல்லாம் ஊற்றாய் கிளம்பி, உன்னுள் இருந்த காதல் உன் கோவத்தை மிஞ்சி அவளை மறுபடியும் பார்க்க மாட்டோமா என்று தவிக்க வைத்திருக்கிறது " , என்று அவன் மனம் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டது. அத்தியாயம் - 9 மாலை 4.30 மணி அளவில் தென்காசியில் உள்ள அவனது அக்கா கீர்த்தியின் வீட்டிற்கு சேர்ந்தார்கள். கார் அவர்களுது வீட்டின் வாசலுக்கு சென்றதும், வீட்டினுள் இருந்த சுஜி, அர்ஜுன் இருவரும் "ஐ, மாமா வந்தாச்சு ", என்று குதூகலத்துடன் ஓடிச் சென்று தாத்தா, பாட்டி மற்றும் மாமாவை கட்டி அணைத்துக் கொண்டனர். "வாங்கப்பா,வாங்கம்மா, வாடா ராம்", என்று கீர்த்தி வாசலுக்கு தனது கணவனுடன் வந்து வரவேற்றாள்.அவர்கள் வீட்டுக்குள் வந்ததும், கீர்த்தியின் மாமனார் மாமியார் "வாங்க சம்பந்தி.. வாங்க.. பிரயாணம்லாம் எப்படி இருந்துச்சு? " என்று விசாரித்தவாறே வரவேற்றார்கள். மாடியிலிருந்து வந்த ராமின் அத்தானின் தங்கை பானு மற்றும் அவளது கணவன் கார்த்திக் தங்கள் பங்கிற்கு, " எல்லாரும் வாங்க.. எப்படி இருக்கீங்க எல்லாரும் ??", என்று வரவேற்றனர். கீர்த்தியின் கல்யாணம் ஆன நாளிலிருந்து தீபாவளி, பொங்கல் போன்ற எந்த ஒரு பண்டிகை என்றாலும் கீர்த்தியின் புகுந்த வீட்டில் வைத்து தன அனைவரும் ஒன்றாக கூடி கொண்டாடுகின்றனர்.

No comments:
Post a Comment