ஒரு வழியாக நாங்கள் சேலத்தை அடைந்து அங்கு ஏற்காடு போகும் வழியில் மலை அடிவாரத்தில் ஒரு தார்ரோடில் போய் கொண்டு இருந்தோம். நான் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு இப்போ தான் கண் விழித்தேன். கீதா கார் ஓட்டிக்கொண்டு இருந்தாள். அவள் தான் ஓட்ட வேண்டும். ஏனெனில் அவளுக்கு தான் போக வேண்டிய இடம் பற்றி தெரியும். அவளுக்காகத்தான் நாங்க வந்தது. இதில் என்னை ஒரு பாதுகாப்பிற்காக கூட்டி வந்திருக்கிறார்கள்.மலை அடிவார சாலையில் கார் வழுக்கிகொண்டு சென்று கொண்டு இருந்தது. இப்ப தான் மழை பெய்து விட்டு இருக்க வேண்டும். மழை விட்ட மண் வாசனை மூக்கைத் துளைத்தது. இலை செடியெல்லாம் நனைந்து ஈரமாகி இருந்தன. காரை விட்டு இறங்கி நடந்தால் சுகமாக இருக்கும். அதுவும் என் காதலியொடு கைகோர்த்துக் கொண்டு நடந்தால் இன்னும் சுகமாய் இருக்கும். காதலிக்கு இப்போ எங்கே போவது? சினிமாவில் பார்த்து தன்னை ஹீரோவின் இடத்தில் பொருத்தி கற்பனையிலெயே கொஞ்ச நேரம் மகிழ்ந்து இருப்பது தான் சாத்தியம். அதுவும் கொஞ்ச நேரம் தான். அப்புறம் நிறைய குறுக்கீடுகள் வந்து கற்பனையை கலைத்து விடும். நிஜ உலகின் குழியில் இழுத்து தள்ளி மூடி விடும். பிறகு அதிலேயே உழன்று மூச்சு முட்டி கஷ்டப்பட்டு மூச்சு வேண்டி தலையை மேலே குழிக்கு வெளியே தூக்கி புதிய காற்றை சுவாசிக்கையில் தான் இவ்வளவு காலம் குழிக்குள் இருந்தது உணர ஆரம்பிக்கும். உணர்ந்த் பின் சும்மா இருக்க முடியுமா? வெளியே மேலே வர மனம் யத்தனித்து உடலை இயக்கும். உடல் வெளியேற முயன்றால், இவன் தப்பிக்க பார்க்கிறான் என்று குறுக்கீடுகள் மீண்டும் உள்ளே இழுக்கும். மீண்டும் அவைகளோடு போராடி சண்டை போட்டு ஜெயித்தால் தப்பிக்கலாம். இல்லையென்ரால் கொஞ்சமாக நம் பலவீனம் , நம் வலிமை குறைந்தால் போயிற்று. அவ்வளோ தான் குழியிலேயே மாட்டிக் கொள்ள வேண்டியது தான். வெளியேற முடியாது என்று நம் பலம் எல்லாம் இழந்த தருணத்தில் போராட்டத்தை கை விட்டாலாவது வேதனையை கை விடலாம். மன நிம்மதியாவது மிஞ்சும். ஆனாலும் வெளியே சுதந்திரமாக போக வேண்டும் என்கிற வேட்கை ஏக்கமாக மனதில் அழியா பச்சை குத்திகொள்ளும். பெற்றோராக, மனைவியாக, குழந்தைகளாக , உறவினர்களாக, நண்பர்களாக, அலுவலகமாக, அலுவலக அதிகாரியாக, எதிரிகளாக என பல பல சங்கிலிகள் குறுக்கீடுகளாய். கீதா ஒரு காம்பவுண்ட் முன்னே காரை நிறுத்தினாள். கீழே இறங்கினோம். அது ஒரு மரத்தால் கட்டிய வீடு. எல்லாம் மரம். காம்பவுண்டும் மரக்கட்டை மற்றும் செடி கொடியால் அமைத்து இருந்தார்கள். வீடு ஒரு க்ரீன் அவுஸ். மிக நேர்த்தியாய் வடிவமைத்து இருந்தார்கள். கீதா உள்ளே போய் பேசினாள். நானும் அஞ்சுவும் வெளியே நின்று இருந்தோம். இப்படியே ஒரு வாக் போனால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அஞ்சுவிடம் இப்படியே அந்த கடைசீ வரைக்கும் நடந்து விட்டு வரேன் என்று சொல்ல நானும் வருவதாக ஒட்டிக்கொண்டாள். நாங்கள் இருவரும் கீதாவுக்கு சொல்லிவிட்டு நடந்தோம்.அஞ்சு காற்றின் குளுமையை அனுபவிக்க அதன் வேகத்தை ஈடு கொடுக்க கூந்தலை அவிழ்த்து தளர்த்தினாள். காற்றில் அவள் தலை முடிகள் குதித்தாடியது. அவள் முன் நோக்கி நகர நான் பின்னால் அவள் கூந்தல் விரிந்த அசைந்தாடிய அழகை ரசித்துக் கொண்டே சென்றென். இவளை மணப்பவன் குடுத்து வைத்தவன் என் எண்ணினேன். ஒரு இளனீர் கடையில் நின்றாள். உனக்கு வேண்டுமா என் கேட்டாள். நான் தலை அசைத்தேன். ரெண்டு இளனீர் வெட்டி குடுக்க இருவரும் குடித்து முடித்தோம்." என்ன சார் ரொம்ப அமைதியா இருக்கீங்க? மூஞ்சிய பாரு இந்த குழந்தையும் பால் குடிக்குமாங்குற மாதிரி"" பாலா குடிக்குறேன் ? இளநீ இல்லை?""ம்ம் இதெல்லாம் நல்லா தான் பேசுற, ஆனா............""என்ன ஆனா?"" ஒன்னும் இல்லை நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம் உன் பர்சனல் மேட்டர்ல தலையிட நான் யாரு?" என்னை பிரிச்சு பேசாத, நான் எப்பவும் உன் ஃப்ரண்டு தான். நீ கூப்பிட்டன்னு தான நான் வந்தேன்?"அதாம் தப்பா போச்சு, அது எப்படி டா , அவ்ளோ காஞ்சு கிடந்தினா வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான"" நான் காஞ்சு கிடக்குறேங்குறது உண்மை தான். ஆனா கல்யாணம் பண்ணுறது அவ்ளோ ஈஸி இல்லை தெரியுமா? நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை?" நான் இப்ப தான் வேலை ல செட்டில் ஆகி இருக்கேன். அடுத்த ப்ரொமொஷன் வாங்கிட்டு பண்ணிக்குவேன்." அது தப்பான லாஜிக் ப்ரொமொஷன் எதுக்கு குடுக்குறாங்க? இப்ப ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்குற, வருங்காலத்துல இன்னும் ரொம்ப நேரம் கூடுதல் பொறுப்பு எடுத்துகிட்டு வேலை செய்ய்யனும் தான். அதுவும் நீ வீட்டுக்கே போகாம ஆபிஸ் லெயே தூங்கி வேலை செஞ்சா அடுத்த ப்ரொமொஷனும் க்யாரண்டி. இப்படி ப்ரொமொஷன் வாங்கி வீட்டுக்கே போகாம இல்லை போய் தூங்கிட்டு மட்டும் வந்தா அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணனும்?" சார் இவ்ளோ தெளிவா பேசுறீங்களே , நீங்க இன்னும் மேரேஜ் பண்ணாததின் காராணம் என்னவோ?" உன்னை மாதிரி ஒரு தேவதை இன்னும் கிடைக்கலை, அதான் லேட் ஆகுது"உடனே அவள் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. கண்கள் விரிந்தது. என்னை குறு குறுன்னு பார்த்தாள்."ரொம்பதான் ........ ஆசை...." என்றாள்.அப்போது கீதா வெளியே வந்து எங்களை நோக்கி கை அசைத்தாள். நாங்கள் அவளை நோக்கி பேசாமல் வேகமாய் நடந்தோம்.Last edited by nettaiyan : 2 Weeks Ago at 08:14 PM.
No comments:
Post a Comment