பேருந்தில் இருந்து இறங்கி பாக்டரிக்குள் நுழைந்தான். பயோ மெட்ரிக் முறையில் தனது வருகையை பதிவு செய்துவிட்டு நேராக கேன்டீனிற்குள் நுழைந்தான். காலை உணவை முடித்து விட்டு வெளியே வந்தவனை , ஆலமரத்துக்கடியில் தம்மடித்துக் கொண்டிருந்த ஷங்கர் அழைத்தான். "டிபனாடா போடுறானுங்க ?!!! ", என்று அங்கலாய்த்துக் கொண்டே சென்ற ராமை... ஷங்கர் " டேய் , ஒழுங்கா ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு , பொண்டாட்டி கையால மனமா ருசியா சாப்பிடுறத விட்டுட்டு இங்க வந்து கேன்டீன் சாப்பாடு சரியில்லன்னு புலம்பி கிட்டு இருக்க " என்று சொல்லி முறைத்தான்.பதிலுக்கு ராம் " என்ன மாப்புள்ள, மிச்சவங்க தான் என் வேதனைய புரிஞ்சுக்காம பேசுறாங்கனா.. நீயுமாடா ???" என்று சொன்னான் ராம்.அதற்கு , "உன்னைய பத்தி நல்ல தெரிஞ்சது நாலா தான் சொல்றேன் மச்சி . நீயும் எல்லாரையும் மாதிரி கல்யாணம் பண்ணி வாழ்கையை சந்தோசமா மாற்றப் பாருடா", என்ற ஷங்கரின் வார்த்தைகளை தனது காதில் போட்டுக் கொள்ளாமல் தனது டிபார்ட்மென்ட் நோக்கி விரைந்தான். "எதாவது சொன்னா, உடனே கோவிச்சுக்குவியே ", என்று சொன்னவரே ராமை பின் தொடர்ந்து சென்றான் , அவனது சக ஊழியர் மற்றும் நண்பனா ஷங்கர். எனது டிபார்ட்மென்ட்டிற்குள் நுழைந்து எனது இருக்கைக்கு சென்று எனது கணினியை உயிர்பித்து எனது வேலையை ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து, இண்டர்காமில் ராமை தனது அறைக்கு வருமாறு அவனது பாஸ் அழைத்தார். அவரது அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான் ராம்."குட் மார்னிங், ராம் " என்று சொல்லி இருக்கையில் அமர கை காட்டியவர் , மூர்த்தி.ஐம்பது பிராயம் உள்ளவர் என்பதை அவர் முன் தலையில் இருந்த வழுக்கையும் அவரது டை அடிக்கப்படாத பின்தலை முடியும், மூக்குக் கண்ணாடியும் உணர்திகிறது நமக்கு. "குட் மார்னிங் சார் ", என்று பதிலுக்கு ராமும் கூறிவிட்டு தன்னை எதற்காக அழைத்தீர்கள் என்பதை போன்ற ஒரு பார்வையை அவனது பாசை நோக்கிப் பார்த்தான். அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவராய், " உன்னோட இந்த மூணு மாச இன்சென்டிவ் ரிப்போர்ட் வந்துடுச்சு. நான் பரிந்துரைத்ததின் பேரில் உனக்கு இந்த முறை சம்பள உயர்வு மட்டுமல்ல ப்ரோமோஷனும் கிடைச்சிருக்கு " என்று சிரித்துக் கொண்டே சொன்னார்பதிலுக்கு ராமிடம் இருந்து பெருமகிழ்ச்சியை எதிர்பார்த்த மூர்த்தி , ராம் பெயரளவில் சிறு புன்னகை உதிர்த்ததைக் கண்டு வியப்படையவில்லை.ஏனென்றால் ராமின் நடவடிக்கைகளை சிறிது காலமாக கண்காணித்து வந்த மூர்த்தி இப்பொழுது , "என்ன பிரச்சனை ராம் உனக்கு ???", என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார். "ஒன்னும் இல்லையே சார் ", என்று பதில் சொன்னான் ராம். " பின்ன , நான் எவ்வளவு பெரிய குட் நியூஸ் சொல்லிருக்கேன். நீ என்னடா னா கொஞ்சம் குட சந்தோஷப்படாம இப்படி உதட்டளவில் சிரிச்சுக்கிட்டு இருக்க ", என்று சொல்லி மேலும் தொடர்ந்தார். " நான் உன்னைய வர சொன்னது ப்ரொமோஷன் பத்தி மட்டும் சொல்ல இல்ல. நீ ஏன் கொஞ்ச நாளா சரி இல்லைன்னு தெரிஞ்சுக்கவும் தான்?? ", என்று சொன்னார் மூர்த்தி. இந்த கேள்வியால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் , சற்றே சமாளித்தவாறு " வீட்ல கொஞ்சம் பிரச்சனை சார்.. அதனால் தான்", என்றான். "வீட்டுல பிரச்சனையா, மனசுல பிரச்சனையா ?? ", என்று கேட்டுவிட்டு .. " என் பதிலுக்கு எதிர்பாராமல் "எனக்கு தெரியாதுன்னு நினைக்காத.. லவ் ப்ரொப்லமா!!!! யார் அந்த பொண்ணு ?? " இந்த கேள்வியில் மிகவும் அதிர்ந்து போன ராம் , என்ன சொல்வது என்று தெரியாமல் அவரின் முகத்தை பார்க்காதவாறு அருகிலிருந்த ஜன்னலையே வெறித்தவாறு அமர்ந்திருந்தான். மூர்த்தி தனது பாஸ் என்றாலும் , இது வரைக்கும் அவர்கள் இருவரும் நண்பர்கள் போல தான் பழகி வந்திருந்தனர். அரசியல், விளையாட்டு, சமூகம் என்று எல்லாவற்றை பற்றியும் அவரிடம் விவாதித்து இருக்கிறான். ஏன் , சில சமயம் அவரது சொந்த விஷயங்களுக்கு கூட ஆலோசனை கூறி உதவி இருக்கிறான். இருந்தும் இத்தனை நாள் ராமின் சொந்த விஷயங்களில் அவர் தலையிடாதது பற்றியும் தற்பொழுது ஏன் தான் விஷயத்தை பற்றி கேட்கிறார் என்று யோசித்துக்கொண்டு இருந்தான் .நீண்ட யோசனையில் இருந்த அவனை, " என்ன தான் காதல் தோல்வியா இருந்தாலும் . அதற்கு பின்னும் வாழ்க்கை இருக்குதுனு புரிஞ்சு செயல்பாடு ராம் . காதல் தோல்விக்கு மருந்து காதல் தான். அது உன் மனைவி உன்கிட்ட காட்டும் காதல் தான். உன் பழைய காதலை மறக்க செய்யும் . அந்த அன்பே உன்னை மறுபடியும் சந்தோஷ நிலைக்கு கொண்டு வரும் ராம். " என்று கூறி அவனை அவனது இருக்கைக்கு அனுப்பி விட்டார்.அன்று முழுவதும் இதே குழப்ப நிலையில் இருந்த ராம். தன் வாழ்கையில் எத்தனை பேர் தான் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து சந்தோசப் பட்டான். ஆனால் ஷங்கர் சொன்னதையோ மூர்த்தி சார் சொன்னதையோ குறித்து சிறிதும் யோசிக்க மறுத்து அவன் மனம் மாறவில்லை. அவனது மனத்தில் அவளது நினைவுகள் வரவே, வேளையில் நாட்டம் இல்லாமல் , நினைவலைகளில் சிக்கித் தவித்தான். அன்று அலுவலகம் முடிந்ததும் தனது வீட்டிற்கு செல்லாமல் , நேராக விளையாட்டு மைதானத்திற்கு சென்று அங்குள்ள சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதையே இருட்டும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்படியும் அவன் மனதின் எழுந்த நினைவுகள் அவனை விடவில்லை. பின்பு ஒரு உணவகத்தில் சிறிது சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வந்து தனது நாட்குறிப்பை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான். அன்றைய நிகழ்வுகளை எல்லாம் குறித்து கொண்டான். இப்பொழுதெல்லாம் தன் மனதில் உள்ள சொல்ல முடியாத உணர்வுகளை வெளியேற்றும் வடிகாலாக நாட்குறிப்பில் கிறுக்குவதை பழக்கமாகி விட்டது ராமிற்கு . அதன் பின்னரே அவன் மனம் சற்று அமைதி அடைந்து நித்திரா தேவி அவனை ஆட்கொண்டாள்.
No comments:
Post a Comment