Sunday, 6 April 2014

"கனவெல்லாம் நீ தானே.. "  9

கடைசியில் நினைவின் போக்கிலேயே அவனது மனதை விட்டு விட்டான். நந்தினியும் ராமும் பெங்களூரில் சேர்ந்து பார்த்த ஒரே திரைப்படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா' மட்டுமே. நந்தினி அந்த படத்தின் இறுதியில் "ராம்.. போயும் போயும் இந்த படத்துக்கு என்னைய கூட்டிட்டு வந்துட்டியே.. எனக்கு இந்த படம் சுத்தமா பிடிக்கவே இல்ல. கடைசியில சிம்புவ இப்படி அம்போன்னு விட்டுட்டு போய்ட்டா பாரேன் !!! "நந்தினி இவ்வாறு சொல்லிக்கொண்டே இருக்க ராமிற்கு பேச்சே வரவில்லை. இன்னும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் பாதிப்பிலிருந்து மீளவில்லை. அதன் பின்னர், நந்தினி ராமைப் பிடித்து சிறிது உலுக்கிய பின்னே, அவனால் அந்த படத்திலிருந்து மீள முடிந்தது. நந்தினி " என்னாச்சு ராம்.. நானும் உன்ன அப்படி ஏமாத்திடுவேன்னு நினைக்கிறயா ??! ", என்று கோவமாக கேட்க.. "ச்சே ச்சே .. அப்படிலாம் ஒன்னும் இல்லடா குட்டிமா.. நான் எப்போதுமே நிழல் உலக சினிமாவையும் நிஜத்தில் நடப்பதையும் சேர்த்து வச்சி பார்க்க மாட்டேன், ஆனா இன்னிக்கு மட்டும் என்னனு தெரியல வேற எதோ ஒரு இனம் புரியாது சோகம் மனசை தொடுகிறது. அதான் பேச முடியாமல் ஸ்தம்பிச்சு நின்னுட்டேன் ." என்று ராம் கூறினான். நந்தினி அவனது மன நிலையை உணர்ந்து, அவன் அருகில் சென்று " ஹக் மீ ராம்" என்று ஹஸ்கி வாய்சில் கூற, ராமிற்கும் அந்த அரவணைப்பு அப்போது தேவைப்பட்டது. அவளை கட்டி அணைத்தவாறே நடக்கலானான்.கீழே, டிவியில் சிம்பு த்ரிஷாவிடம் தனது காதலை சொல்லிக் கொண்டிருக்கும் ஒலி மொட்டை மாடி வரை கேட்டுகொண்டிருந்தது. அதை கேட்ட உடனேயே ராமின் மனமும் , தான் எவ்வாறு தனது காதலை நந்தினியிடம் சொன்னோம் என்ற நினைவு வந்தது. "மனம் ஒரு குரங்கு", என்ற பழமொழி மிகவும் சரி தான். நொடிக்கு ஒரு முறை பல்வேறு விஷயங்களை நினைவிற்கு கொண்டு வந்து மூளையை ஒரு நிலையில் இல்லாது செய்து விடக்கூடிய ஆற்றல் அதற்கு உண்டு. முதலில் நந்தினியும் ராமும் , 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்கு போன நினைவுகள், இப்பொழுது ராமின் காதலை வெளிப்படுத்திய தருணம் என்று மாறிக் கொண்டே சென்றது ராமின் மனம்.




ராமும் நந்தினியும் கல்லூரியில் மிக நெருங்கிய நண்பர்கள் ஆயினர். ராம் படிப்பதோ மெக்கானிக்கல், நந்தினியோ கணிப்பொறியியல். ஆனாலும் கல்லூரியில் பாட நேரம் தவிர மற்ற நேரங்களில் , நந்தினியையும் ராமையும் ஒன்றாகவே பார்க்க முடியும். மதிய நேரத்தில் அவரவர் ஹாஸ்டலில் விரைவாக உணவு உண்டு முடித்து விட்டு , கேன்டீன் முன்பிருந்த மரத்தடியில் உட்கார்ந்து தினமும் பேசுவது இருவருக்கும் வாடிக்கை ஆகிவிட்டது. ஒரு பையனும்பொண்ணும் தனிய பேசிட்டு இருந்தாங்கன்னா, அவங்களோட நண்பர்கள் சும்மாவா இருப்பாங்க. எதையாவது கொளுத்திப் போட்டு கல்லூரி முழுக்க அந்த புரளிய பரிப்புடுவங்க தானே.. அதே போல நந்தினியும் ராமும் காதலிக்கிறார்கள் என்ற வதந்தி கல்லூரி முழுவதும் பரவி இருந்தது. இந்நிலையில் ஒரு நாள், மதிய உணவு இடைவேளையில், எப்பொழுதும் போல் , ராமும் நந்தினியும் பேசிக்கொண்டிருந்த பொழுது, அந்த வழியாக சென்ற ராமின் நண்பர்கள் சிலர், "என்ன மாப்ள, சொன்ன படியே பிகர உஷார் பண்ணிட்ட போல !!!", என்று கத்தினான். நந்தினிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களிடம் நேராக சென்றாள். " நானும் போன போதும்னு விட்டா. பேசிக்கிட்டே போறீங்களே. அது எவன்டா பிகர உஷார் பண்ணிட்டியானுகேட்டது??? ஒரு பொண்ண என்னலாம் பெயர் வச்சி கூப்பிடுறீங்க !!!! பிகரு , ஐடம், பார்ட்டி-னு !!! பொண்ணுங்க எல்லாம் வெறும் காம பொம்மை இல்ல. முதலில் ஒரு பொண்ண, உயிருள்ள ஒருத்தியா, ஒரு சக மனுஷியா, உங்களை போலவே உணர்சிகள் உள்ளவளாக பார்க்க கத்துக்கோங்க. அதுக்கு அப்புறமா, எந்த ஒரு பெண்ணும் உங்கள மதிச்சு பேசுவா !!! பொண்ணுங்கள மதிக்க தெரிஞ்சதுனால தான் ராம் கிட்ட நல்ல நட்பாக பழகிட்டு இருக்கேன்.அதை விட்டுட்டு இன்னொரு தடவை பிகரு கிகருனு சொல்லுங்க!!! நடக்கறதே வேற!!!", என்று சொல்லி விட்டு வெடுக்கென்று அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாள். ராமின் நண்பர்கள் அனைவரும் வாயடைத்துப் பொய் வெட்கித் தலை குனிந்து நின்றனர். ராமும் வாயடைத்து போய் நின்றிருந்தான். நந்தினியின் மேல் ராமுக்கு இருந்த மரியாதை பன்மடங்காக உயர்ந்தது. ராமின் நண்பர்களும் நந்தினியிடம் தங்களை மன்னிக்க கேட்டுகொண்டனர். இந்த விஷயம் கல்லூரி முழுவதும் பரவி நந்தினியும் மேல் அனைவருக்கும் மரியாதையை உண்டானது.

No comments:

Post a Comment