கரு நிற வானில் நட்சத்திரங்கள் மினுக் மினுக் என்று இன்னும் மின்னிக் கொண்டிருந்தன. கதிரவன் உதயமாக இன்னும் நான்கு நாழிகைகள் மீதம் இருந்த நிலையில் கருமேகங்கள் சிறுது சிறிதாக தனது கருமையைப் போக்கி வெளிச்சத்தை தர ஆரம்பித்திருந்தது. மார்கழி மாதம் என்பதால் எங்கு பார்க்கினும் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. பனியால் ஏற்பட்ட வெண்திரை போன்ற புகை பெங்களூரு நகரின் வீதிகள் அனைத்தையும் மூடி இருந்தன. இந்த அதிகாலைப் பனியிலும் முழுக்கை ஸ்வெட்டெர்களால் முழுங்கப்பட்ட பெங்களூரு வாழ் மக்கள் தங்களின் நடைப் பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். மாசில்லா குளிர்வாடைக், குயிலின் ஓசை, மொட்டு விரிந்து மலர்ந்த பூக்களின் மனம் , விடிந்தும் விடியாத கரு வெளுப்பு கலந்த நீல நிற வானில் மிதக்கும் சந்திரன் - இவை அனைத்தும் அதிகாலை எழுவோர் மட்டுமே அனுபவிக்கும் இயற்கை அற்புதங்கள். இவற்றை ரசித்தவாறே நடை பயிற்சி கொள்வது என்பது ஒரு சுகம் என்றால், மார்கழி மாதக் குளிரில் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவது மற்றொரு சுகம். இவற்றில் இரண்டாவது சுகத்தை அனுபவித்து தூங்கிக்கொண்டிருக்கும் போது , அந்த சுகத்தை கலைப்பதற்கென்றே அடிக்கும் விழிப்பு மணியை போன்ற எரிச்சலான விஷயம் வேறொன்றும் இல்லை. அதுவும் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக சீக்கிரமாக எழ வேண்டும் என்பது அதையும் விட மிகப் பெரிய கடுப்பான ஒன்று. அதே கடுப்புடன் விழிப்பு மணியை ஐந்து நிமிடத்திற்கு ஸ்நூஸ் செய்து விட்டு மறுபடியும் போர்வைக்குள் புகுந்தான் ராம்.இந்த ஐந்து நிமிட சிறு தூக்கத்திலும் வந்து போனது ஒரு முகம். அந்த முகம் வந்ததும் அவனது எண்ணங்களில் சிறிது சலிப்பு ஏற்பட்டுஎழுந்தான்.எழுந்து மணியைப் பார்த்தால், மணி ஐந்தே முக்காலை தொட்டு நின்று கொண்டிருந்தது. 'ச்சே !! இன்னிக்கும் லேட்டா!! 'என்று நினைத்த உடனே ராமை ஒரு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. அவசர அவசரமாக எழுந்து பாத்ரூமிற்குள் புகுந்து காலை கடன்களையும் அதே அவசரத்துடன் முடித்து வெளி வந்து போது மணி 6.10 ஆகியிருந்தது.நேராக மொட்டை மாடிக்குச் சென்று உள்ளாடைகளை காய வைத்து விட்டு கிழக்கு நோக்கி கதிரவனைப் பார்த்து இரு கரம் கூப்பி நின்றான். ராமிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. அலுவலகத்திற்கு கிளம்ப காலை எவ்வளவு தாமதமாக எழுந்தாலும் சூரிய நமஸ்காரம் செய்யாமல் போக மாட்டான். இந்த பழக்கத்தை சிறு வயதில் இருந்தே தவறாது கடை பிடித்து வருகிறான். பத்து நிமிட சூரிய நமஸ்காரம் செய்த பிறகு மீண்டும் அவசர அவசரமாக உடை மாற்றி , தனது அறையை மூடி விட்டு தனது அலுவலக பேருந்து வரும் நிறுத்தத்திற்கு ஓடினான். பேருந்து நிறுத்தத்தை ஓடி போய் அடைந்து அதனருகில் இருந்த பிள்ளையார் கோவிலின் முன் சென்று பிள்ளையாருக்கு ஒரு வணக்கத்தை சொல்லி விட்டு வரவும் அவன் முன்னே அவனது அலுவலக பேருந்து சரியாக 6.30 மணிக்கு வந்து நின்றது. பேருந்தில் ஏறி உள்ளிருக்கும் அனைவருக்கும் ஒரு காலை வணக்கம் கூறிவிட்டு கடைசி இருக்கையில் போய் அமர்ந்து புஸ் புஸ் என்று பெருமூச்சு விட்டு ஆசுவாசபடுத்திக் கொண்டான். சிறிது நிமிடத்திற்கு பின் , அங்கிருந்தவர்களை எல்லாம் ஒரு முறை பார்த்தான். தான் முதன் முதலாக இந்த பேருந்தில் ஏறிய போது தனக்கு கிடைத்த மரியாதையையும் இப்பொழுது தனக்கு கிடைக்கும் மரியாதையும் எண்ணி வியந்து கொண்டான்.
ராம் முதன் முறை இந்த பேருந்தில் ஏறும் போது அவன் ஒரு வருட தற்காலிக அப்பரன்டீசாக இருந்தான். ஆதலால் நிரந்திர வேளையில் உள்ள அலுவலர்கள் அனைவருக்கும் உட்கார இடம் கிடைத்த பின் தான் அவனுக்கு இடம் கிடைக்கும். பெரும்பாலும் உட்கார இடம் இல்லாமலும் , வேறு இருக்கைக்கு மாறி செல்லுமாறும் அவனை கடுப்பேத்துவார்கள். ஆனால் இப்பொழுதோ அவன் நிரந்திர அலுவலர்களுள் ஒன்றாக மாறி 8 வருடங்கள் ஆகின்றன. தற்பொழுது ராம் எந்த இருக்கையிலும் எவ்வித கவலையுமின்றி யாருக்காகவும் எழுந்திருக்க வேண்டும் என்ற பயமின்றி ஒரு கெத்தாக அமர்ந்திருந்தான். தனக்கு கிடைக்கும் இந்த மரியதைக்கெல்லாம் காரணம் ஒருத்தியே. ஆனால், அவளின் நினைவுகள் இப்பொழுது வந்தாலே, ராமிற்கு ஒரு வித எரிச்சல் மனதில் உண்டாகின்றது. எப்படியும் அலுவலகம் போய் சேர ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் சிறிது கண்ணயர நினைத்து கண்களை மூடினான். ஆனால் அவன் கண் முன் அவள் மறுபடியும் தோன்றினாள். "ச்சை !!! என்னடா இந்த சிறு கனவிலும் அவளின் முகமா !?!! "என்று தன்னை தானே நொந்து கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

No comments:
Post a Comment