கீர்த்தியின் கணவன் மகேஷ், மற்றும் அவனது பெற்றோர் வேணுகோபால்-கோமதி தம்பதியினர் மிகவும் நல்ல குணம் உடையவர்கள். ஆதலால் தான் பண்டிகை தினத்தன்று அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடவேண்டும் என்பதை உணர்ந்து கீர்த்தியின் குடும்பத்தையும், தனது மகள் பானுவின் கணவன் குடும்பத்தையும், தங்கள் வீட்டிலேயே கொண்டாட அழைப்பர். ராம், கீர்த்தியின் வீட்டில் நுழைந்தது முதல் சுஜி, அர்ஜுனிடம் மட்டுமே பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தான். அவர்களுக்கு வாங்கிய டெடி பியர் பொம்மையையும், சோட்டா பீம் பொம்மையையும் கொடுத்தும் குழந்தைகள் இருவரும் குஷியாகினர். அடுத்த நாள் காலை, அனைவரும் அதிகாலையிலேயே விழித்து, குளித்து, புத்தாடைகளை உடுத்தி, வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதில் மும்முரமாயினர். பெண்கள் அனைவரும் பொங்கல் பானையில் அரிசி மற்றும் பருப்பை போட்டு உலையையை தயார் செய்ய, ஆண்கள் அனைவரும், விறகு மற்றும் பனை ஓலையை வெட்டி நெருப்பு புகைவதற்கு உதவிக் கொண்டும், கரும்பை ஒடித்து குழந்தைகளுக்கும் தாங்களும் உண்டு கொண்டும் இருந்தனர்.அப்பொழுது அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டும், மற்றவரை விளையாட்டாக கலாய்த்துக் கொண்டும் இருந்தனர்." என்ன மகேஷ் அத்தான், எங்க அக்கா பின்னாடியே பம்மிக் கிட்டு நிக்குறீங்களே !!! என்ன ஆச்சு ??", என்றான் ராம்."அத ஏன் கேட்குற ராம், உங்க அக்காவ பொங்கலுக்கு துணி எடுக்க ஆரெம்கேவி கூட்டிட்டு போயிருந்தேன். பொம்பளைங்க புடவை எடுக்குறதுனா சும்மாவா ?? உங்க அக்கா அன்னிக்கு முழுசும் அந்த கடைல தான் குடித்தனம் நடத்தினா. அந்த கடுப்புல இருந்த என்கிட்டே, ஏதோ ஒரு புடவைய காட்டி இது எப்படி இருக்குனு கேட்டதுக்கு நானும் சூப்பரா இருக்குனு சொல்லி வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப என்னடான அந்த புடவை நல்லா இல்ல. நீங்க சொல்லி தானே எடுத்தேன். இப்ப பாருங்க நல்லா இல்லன்னு சொல்லி என்னைய அடிக்க வர்றாப்பா.. ", என்று நீளமான கதையை சோகமான முகத்துடன் சொல்ல ராம் விழுந்து விழுந்து சிரித்தான்.உடனே கீர்த்தி, " என்ன அங்க சத்தம் ??", அப்படின்னு தன் கணவனை பார்த்து முறைத்துக் கொண்டே கேட்க.." சும்மா பேசிகிட்டு இருந்தேன்மா.. ", என்று வடிவேலு போல திரும்பவும் கீர்த்தியின் பின்னாலே சென்று பம்ம ஆரம்பித்தார் மகேஷ்.______________________________
இதை கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக், "அங்கேயாவது பரவாயில்லை.. எங்க அண்ணிக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்து கொடுத்திருக்காரு. நீங்க எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு தான் எடுத்து தந்திருக்கீங்க.. அதனாலே நான் இத கட்ட மாட்டேன். இப்பவே எனக்கும் ஐயாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்து கொடுங்கன்னு சொல்லி புடவைய என் மேல தூக்கி எரிஞ்சு கோல் போடுறா பானு.. நான் தான் உன் பிறந்த நாளைக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு புடவை எடுத்து கொடுக்குறேன்னு சொல்லி சமாதானம் பண்ணி வச்சிருக்கேன். ", என்று மகேஷ் அத்தான் சொன்னதை விட பெரிய கதையாக சொல்லி கார்த்திக்கும் அப்பாவியா மூஞ்சை வைத்துக் கொண்டான். " ஹாஹாஹா... ஹாஹாஹா... " என்று தான் சிரிப்பை அடக்க முடியாமல் ராம் சிரிக்க, ராம் சிரிப்பதை பார்த்து சுஜியும் அர்ஜுனும் ராமுடன் சேர்ந்து சிரித்தனர். இதை பார்த்து கொண்டிருந்த பானு, " என்ன ராம் மச்சான்.. எங்களை பார்த்து சிரிக்குரீங்களே.. நீங்க எப்ப கல்யாணம் பண்றதா உத்தேசம்?? உங்க பொண்டாட்டி என்ன கேட்குரானு நாங்களும் தான் பார்க்க போறோமே.. " என்று கேட்டாள். உடனே ராம் முகம் சற்றே வாடினாலும், அதை மறைத்துக் கொண்டு, " நான் உன்ன தான் கட்டிக்கலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ளே தான் கார்த்திக் மச்சான் உன்ன தள்ளிக்கிட்டு போயிட்டாரு.. நல்ல வேளை நான் பிழைச்சுக்கிட்டேன்.. ", என்று சொல்லஇதை கேட்ட கார்த்திக், " இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல.. நான் பானுவ இப்பவே உங்களுக்கு கட்டி வச்சிடுறேன். அவ்வளவு தானே .. ", என்று ஆர்வம் பொங்க கூற...பானு 'நங்கென்று' என்று கார்த்திக் தலையில் குட்டி விட்டு முறைத்தாள். இதை பார்த்து அனவைரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதன் பின்னர், பொங்கல் பொங்க ஆரம்பிக்க அனைவரும் "பொங்கலோ பொங்கல்", என்று குலவை இட்டு பூஜை செய்தனர். பின்பு அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டு சாப்பிட்டனர்.ம்
அன்று மாலை பொங்கல் சிறப்பு நிகழ்சிகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதோ ஒரு சேனலில் " விண்ணைத் தாண்டி வருவாயா" படம் ஒளிபரப்பிக் கொண்டிருந்தான். அதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். " விண்ணைத் தாண்டி வருவாயா" படம் என்ற உடனேயே ராமின் எண்ண அலைகள் பலவாறு புரள ஆரம்பித்தன. ராமால் மேலும் அங்கே உட்கார முடியாமல் அமைதியை தேடி மொட்டை மாடிக்கு சென்றான். ஆனால் அவனது எண்ணங்கள் நந்தினியுடன் சேர்ந்து இந்த படம் பார்த்த நினைவுகளையும் சேர்ந்து இருந்த தருணங்களை தர, அதிலிருந்து தான் மனதை மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

No comments:
Post a Comment