Wednesday, 2 April 2014

"கனவெல்லாம் நீ தானே.. "  3

உறக்கத்தில் சிறிது நேரம் கனவுகள் எதுவுமின்று நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவனை மறுபடியும் அவளின் நினைவுகள் வந்து தாக்கின. அவளை முதன் முதலாக பார்த்த தினம் அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆம் அவளை கல்லூரியில் தான் முதன் முதலாகப் பார்த்தான். அவள் பெயர் நந்தினி. நந்தினியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் ராமைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். ராம் - முழு பெயர் ராம் பிரகாஷ். தமிழ் நாட்டில் திருநெல்வேலி சொந்த ஊர். அப்பா கணபதி ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து ரிடயர் ஆனவர். அம்மா முத்து பார்வதி தான் அவர்களது வீட்டின் எஜமானி (அதாங்க ஹோம் மேக்கர்). அக்கா கீர்த்தி திருமணமாகி தனது கணவன் மகேஷுடன் தென்காசியில் இருக்கிறாள். அக்காவிற்கு சுஜியும், அர்ஜுனும் குழந்தைகள். தற்பொழுது 32 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாமல் எல்லாரிடமும் அட்வைஸ் வாங்கியே அலுத்து போய்க்கொண்டிருக்கும் ராம் ஒன்றும் ஜிம் பாடி என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு உடற்கட்டு கொண்டவனல்ல. அசாத்தியமான 6 அடி உயரம், ஒடிசலான தேகம், மாநிறம் உள்ளவன் தான். ஆனாலும் அவனது அசாத்திய உயரத்திற்கு ஏற்ற தசை அமைப்பும் உடல் எடையும் இல்லாததால் அவனை பார்க்கும் பெண்களை அவனால் கவர முடியவில்லையே என்ற வருத்தம் எப்போதும் உண்டு ராமிற்கு. கல்லூரியில் படிக்கும் சமயத்தில் மிகவும் கெட்டிகாரனகவும் இல்லாமல் முட்டாளாகவும் இல்லாத அரை வேய்க்காடகவே இருந்தவன் , தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு அரசு சார்ந்த பொதுத் துறை நிறுவனத்தில் டெபுடி டிசைன் இன்ஜினியாராகப் பணியாற்றுகிறான். இதற்கு காரணம் அவள் தான். அவள் பெயர் நந்தினி.

நந்தினியை முதலில் கல்லூரியில் பார்த்த பொழுது ராமிற்கு கண்டதும் காதல் எல்லாம் வரவில்லை. ராமை போலவே நந்தினியும் பார்த்தவுடன் சொக்கி விடும் அழகி அல்ல. ஐந்தே முக்கால் அடி உயரம் , உயரத்திற்கு ஏற்ற உடல் எடை கொண்டதால் அவள் சிறிது பூசினாற் போல் தான் இருப்பாள். மானிறத்தையும் விட சிறிது கருத்த மேனி. குறுகிய நெற்றி ,அதற்கேற்றால் கொஞ்சமாக வளைந்த புருவம் , சற்றே கூர்மையான நாசி , ஸ்ட்ராபெரி நிறத்து தடித்த உதடுகள். அவளின் கண்களை சற்றே கூர்ந்து கவனித்தோம் என்றால் அவ்வளவு தான் ஒருவன் மயங்கிவிட போதுமான போதை தரும் வெளிர் நீல நிற கண்கள் அது. அவளது அழகே அந்த கண்கள் தான். ராம் கல்லூரியின் சேருவதற்கு முன்னாலே ,மெக்கானிக்கல் பசங்களை தான் எல்லா டிபார்ட்மென்ட் பொண்ணுங்களும் பார்ப்பாங்க என்று யாரோ ஒருத்தன் சொல்லி வைக்க அதை நம்பியே மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்தான். ஆனால் கல்லூரி போன பின்பு தான் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்ல பொண்ணுங்களே இருக்க மாட்டங்கன்னு தெரிஞ்சுது. அட படுபாவி பயலுக இப்படி ஏமாத்திட்டானுன்களேஎன்று நொந்து கொண்டு தனது கிளாசிற்கு சென்றான்.அவனது கல்லூரியில் முதல்ஆண்டில்அனைத்து பிரிவு மாணவர்களையும் கலந்து கிளாஸ் பிரித்து இருப்பார்கள். அப்படினா தான் ஒரு டிபார்ட்மென்ட்க்கும் இன்னொரு டிபார்ட்மென்ட்க்கும் சண்டை வராதுன்னு அப்படி ஒரு ஏற்பாடாம் . ராம் தன் மனதிற்குள் இது தான்டா நல்ல சந்தர்ப்பம். முதல் வருஷத்துக்குள்ளேயே ஏதாவது ஒரு நல்ல பிகரா உஷார் பண்ணனும் என்று முடிவெடுத்தான். அன்னிக்கு அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது ஒவ்வொரு பொண்ணா பார்த்துட்டு வந்தான். ஆனால் ஒரு பொண்ணையும் அவனுக்கு பிடிக்கல. நந்தினி பெயர் வந்த போது அவள் அன்று வரவில்லை. சரி இந்த ஒரு பொண்ணாவது நல்லா இருக்கானு நாளைக்கு பார்ப்போம் என்று தன்னை தானே தேற்றி கொண்டு , திருநெல்வேலிக்கார பசங்களா பார்த்து அவங்க கூட சிநேகிதம் பிடித்துக்கொண்டான் ராம்.

அடுத்த நாள் , அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது நந்தினி பெயர் வந்த போது ஆர்வமாக பார்த்தவனுக்கு நந்தினியைப் பார்த்ததும் " ச்சே , இதுவும் மொக்க பீசு தான ?? வட போச்சே .. போயும் போயும் இந்த காலேஜ்ல வந்து சேர்ந்தேன் பாரு என்ன சொல்லணும் ", என்று தன்னை தானே திட்டிக் கொண்டான். இடைவெளியின் போது வெளியே கிளம்பியவனை அவளுக்கு நேருக்கு நேராக சென்று இடிக்குமாறு அவனுக்கு பின்னாடி இருந்த பசங்க தள்ளி விட்டுட்டாங்க. ஆனால் சிறிது சுதாரித்து கொண்டதால் அவளை இடிக்காமல் அருகிலிருந்த பெஞ்சில் போய் இடித்தேன். ராம் வேணும் என்று அவள் மேல் இடிக்க நினைத்ததாக நந்தினி நினைத்துக் கொண்டு அவனை முறைத்து விட்டு சென்றாள். அவளது கண்களை நேருக்கு நேராக அப்பொழுது தான் முதல் முறையாக ராம் பார்த்து விட்டு, "வாவ்" , என்று கூறினான். என்னடா மொக்கை பீசுன்னும் சொன்னோம் , அவளையே இப்ப "வாவ்" என்று சொல்றோம் என்று தன்னை தானே ஆச்சரியப் பட்டுக் கொண்டான் ராம். அவள் கண்களைப் பார்த்து முதன் முதலாக வாவ் என்று சொன்ன நிகழ்ச்சி தான் என்றென்றும் அவனது கனவில் வந்து அவனைப் பாடாய் படுத்த போகிறது என்பதை அவன் அன்று அறியவில்லை . இன்றும் கனவில் அதே வாவ் நிகழ்ச்சி தான் வந்து அவனது தூக்கத்தை கெடுத்தது. தூக்கத்திலிருந்து விழித்த ராம் , பின்பு தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் வந்து படுக்கையில் புரண்டான். தூக்கம் பிடிப்பதாக தெரியவில்லை. செல்லை எடுத்து மணி பார்த்தால், 1.30ஐ எட்டி இருந்தது. தனது ஆன்ட்ராய்ட் செல்லில் இருந்த கேம் விளையாண்டு கொண்டே இருந்தவன் எப்போது தூக்கம் வந்தது என்று தெரியாமலேயே உறங்கிப் போனான்.______________________________

No comments:

Post a Comment