தனிமை இனிமையும் தரும், வெறுமையையும் தரும். ஒருவர் தனிமையை தானாக தேடிக் கொண்டால் அது அவருக்கு இனிமை. அதே தனிமையை மற்றவர்கள் ஒருவருக்கு தரும் போது அது வெறுமை. தற்போது ராமிற்கு கிடைத்துள்ள தனிமை அவனாக தேடிக்கொண்டது தான். ஆனால் ராம் தானே தேடிக்கொண்ட தனிமையோ அவனுக்கு இனிமையை தருவதாக இல்லை. அவளைப் பிரிய வேண்டி அவன் தேடிக்கொண்ட தனிமை,தற்போது அவனை மற்ற எல்லாரிடமும் இருந்து பிரித்து அவனது வாழ்வையே வெறுமையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.ராம் தற்பொழுது பெங்களுருவில் ஒரு தனி அறையில் தான் தங்கி இருக்கிறான். இந்த அறைக்கு வருவதற்கு முன்னால் அவன் தன் நண்பர்கள் இருவருடன் தான் தங்கி இருந்தான். ஆனால் அவர்கள் இவனுக்கு அவ்வபொழுது கல்யாணத்தைப் பற்றி பேசி அறிவுரை கூறிக் கொண்டே இருந்ததால், அந்த அறையிலிருந்து மாறி தனி ஒரு அறை எடுத்து தனியாகவே சமைத்து (இரவிற்கு மட்டும்) சாப்பிட்டுக் கொண்டு வேலைக்கு சென்று வருகிறான்.
அந்த ஒரு வாரம் எவ்வாறு சென்றது என்றே ராமிற்கு தெரியவில்லை. பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு செல்ல வேண்டிய தேதியும் வந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு செல்ல போகிறோம் என்ற உற்சாகம் ராமிற்கு சிறிதும் இல்லை. அவன் பேருந்தில் ஏறி உட்கார்ந்திருந்த போது, அவனது பக்கத்துக்கு சீட்டில் ஒரு 45 வயது மதிக்கத்தக்க நபர் அமர்ந்திருந்தார். அவர் தானும் திருநெல்வேலிக்கு போவதாக சொல்லி ராமிடம் தன்னை அறிமுகப்படுதிக்கொண்டார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டே இருந்தனர். சிறிது நேரம் கழித்து அந்த நபருக்கு கால் வந்தது. கால் வந்ததிலிருந்து அந்த நபர் , போனில் கார சாரமாக பேசிக்கொண்டே வந்தார். போனை கட் செய்து பின்பு அந்த ஆளின் மகன் செமஸ்டரில் அரியர் வைத்துள்ளதாகவும் அதற்காக தனது மகனிடம் கடிந்து கொண்டதாகவும் ராமிடம் தெரிவித்தார். அவர் அரியர் என்று சொன்னதும் ராமிற்கு தனது கல்லூரி வாழ்க்கையும் அதில் தான் முதல் செமஸ்டரிலேயே அரியர் வைத்ததும் நினைவுக்கு வந்தது. அந்த நினைவிலேயே முழுகிப் போனான்.______________________________
"என்னாச்சு ராம்" என்றாள். அவள் இப்படி திடீர் என்று பேசியதால், "ஒ.. ஒன்னும் இல்லையே", என்று மழுப்பினான் ராம். "பின்ன ஏன் அங்க இங்க பார்த்துகிட்டு முழிச்சுக்கிட்டு இருக்க", என்று கேட்டாள். "அ.. அவுட்புட் வர மாட்டிக்குது" என்று தினறியவாரே கூறினான். "என் கிட்ட கேட்ட சொல்லி தர மாட்டேனான்னு சொல்ல போறேனா.. அத விட்டுட்டு இப்படி திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்க" , என்று சிரித்துக் கொண்டே கூறினாள். "திருதிருவென்று ஏன் முழிக்கிற ??!!! என்று நந்தினி ராமிடம் கேட்கும் பொழுது அவளுடைய கண்கள் அதை செய்து காட்டியது ராமை அப்படியே சொக்க வைத்தது. "இவளின் கண்களில் ஏதும் மந்திர சக்தி உள்ளதா ?? இவளது கண்களைப் பார்த்தாலே இப்படி ஒரு கிறக்கம் ஏற்படுகிறதே",என்று ராம் தான் மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டான். அவ்வாறு நினைத்தது ஒரு கணம் தான், மறு கணம் சுதாரித்து, அவள் சொல்லித் தருவதில் கவனத்தை செலுத்தினான். அவள் சொல்லிக்கொடுத்தவாறே செய்த பொழுது அவனுக்கு எளிதிலேயே அவுட்புட்டும் கிடைத்தது. உடனேயே நந்தினியைப் பார்த்து புன்னகைத்தவாறே, "தேங்க்ஸ்", என்று கூறினான். "ஆம். இப்ப மூஞ்சி எப்படி பிரகாசமாக இருக்கு. கொஞ்ச நாளாவே ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க ?!! " என்று கேட்டாள் நந்தினி. " கொஞ்ச நாளாவே நான் டல்லா தான் இருக்கேன். ஆனா அது இவளுக்கு எப்படி தெரியும் ?!!! அப்படினா இவ என்னைய அடிக்கடி நோட் பண்ணியிருக்காளா ?? இவ எதுக்கு என்னைய நோட் பண்ணனும்" , என்று பல சிந்தனைகள் ராமின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. " கணிதத்தில் தனக்கு அரியர் விழுந்திருப்பதையும், அதை எப்படி க்ளியர் செய்வது என்று தெரியாமல் தான் சோகமாக இருப்பதாகவும்", சொன்னான் ராம். " நான் வேனும்னா ப்ரீ டைம்ல உனக்கு சொல்லித்தரவா" என்று கேட்டாள்.
இப்போதைய சூழ்நிலையில் எனக்கு சொல்லி தர வேற யாரும் இல்லை என்று யோசித்தவாறே " ஹ்ம்ம்ம்.. முடிஞ்சா சொல்லித்தா", என்று கூறினேன். ஆனால், அவள் உடனடியாக " சரி .. அப்படினா தினமும் சாப்பிட்டு முடிச்சுட்டு உணவு இடைவெளியில் சீக்கிரமா வந்துடு. நான் உனக்கு நம்ம கிளாஸ்சில் வைத்தே சொல்லித்தருகிறேன்" என்று கூறிவிட்டு என் பதிலுக்கு காத்திராமல் விடுவிடு வென்று லேடீஸ் ஹாஸ்டல் நோக்கி சென்று விட்டாள். "முடிஞ்சா சொல்லித்தா", என்று கூறிய ராமிற்கு அவளுது பதில் மிகவும் வியப்பை அளித்தது. நாம கேட்டும் உதவாத இந்த உலகத்துல " அவளாகவே முன் வந்து உதவும் அவளது குணம் ராமை மிகவும் ஈர்த்தது. "நந்தினியும் தான் கூறியவாறே, ராமிற்கு தினமும் உணவு இடைவேளையின் போது கணிதம் சொல்லிக்கொடுத்தாள். இதனால் ராமும் நன்றாகப் படித்து முதல் அட்டெம்ப்ட்டிலேயே அதிக மதிப்பெண்களுடன் கணிதத்தை க்ளியர் செய்தான். அது முதல் ராம் நந்தினி மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் இன்று, ராமிற்கு நந்தினியின் நினைவு தன்னுள் எழுந்தாலே பிடிப்பதில்லை.

No comments:
Post a Comment